தளபதி விஜய் 500 ரூபாய் சம்பளமாக வாங்கிக் கொண்டு நடித்த திரைப்படம்.! இயக்குனர் யார் தெரியுமா.?

Vijay : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய். ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் இன்ட்ரஸ்ட் இல்லாமல் தான் இருந்தார். பொழுதுபோக்கு படங்களை பார்த்துக் கொண்டிருந்த விஜய் ரஜினி படங்களை பார்க்கும் போது தான் நாமும் நடிகன் ஆகலாம் என்ற எண்ணம் வந்ததாம்.

ஆனால் விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் நடிக்க வேண்டாம். வேறு ஏதாவது பார் என சொல்லி இருக்கிறார் ஆனால் விஜய் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழி இல்லாமல் எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள்  விஜய் வைத்து நாளைய தீர்ப்பு என்னும் முதல் படத்தை எடுத்தார்.

அதன் பிறகு ரசிகன், விஷ்ணு, தேவா, செந்தூரபாண்டி என பல படங்களில் நடித்து வந்த விஜய் திடீரென ஆக்சன் படங்களில் நடித்தார். அப்படி இவர் நடித்த கில்லி படம் பெரிய வெற்றியைப் பெற்று இவரை முன்னணி நடிகராக மாற்றியது அதன் பிறகு தனக்கான ரூட்டை பிடித்த விஜய் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் இப்படிப்பட்ட விஜய் ஆரம்பத்தில் 500 ரூபாய் எல்லாம் சம்பளமாக பெற்று நடித்துள்ளார் அப்படி இவர் நடித்த திரைப்படம் வெற்றி இந்த படத்தில் ஹீரோவாக விஜயகாந்த் நடித்திருந்தார்.

எஸ் ஏ சந்திரசேகர் படத்தை இயக்கிய இருந்தார் படம் அப்பொழுது வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆரம்பத்தில் 500 ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவராக உயர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.