அந்தப் படத்தில் ஹீரோயினுக்கு தான் வெயிட்டான ரோல்.. அப்பாவிடம் சண்டை போட்ட விஜய்.? வெளிவந்த சுவாரஸ்சிய தகவல்

தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் அசால்டாக 100 கோடி 200 கோடி என வசூல் அள்ளுகின்றன. அதனால் இவரை வைத்து படம் எடுக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர். தளபதி விஜய் அண்மை காலமாக தொடர்ந்து கமர்சியல் படங்களில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். ஆனால் இவர் ஆரம்ப காலகட்டத்தில் காதல் செண்டிமெண்ட் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அப்போது இவரது பல படங்களை எஸ் ஏ சந்திரசேகர் அதாவது விஜயின் அப்பா தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு ஆரம்ப காலகட்டத்தில் பக்கபலமாக அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தான் இருந்து உள்ளார். இப்படி இருக்க எஸ் ஏ சந்திரசேகர் தனது மகன் விஜய் பற்றி சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அது என்னவென்று பார்ப்போம்..

தெலுங்கில் வெளியான பவித்ர பந்தம் என்ற படத்தின் ரீமேக் தான் பிரியமானவளே படம். இந்த படத்தின் உரிமையை எஸ் ஏ சந்திரசேகர் வாங்கிவிட்டு விஜயை நடிக்க சொல்லி கேட்டு உள்ளார், அதற்கு விஜய் இதுல என்னப்பா இருக்கு, ஹீரோயின் தானப்பா ஜெயிக்கிறாங்க, இதில் நான் நடிக்கவில்லை என கூறியுள்ளார். ஆனால் விடாபிடியாக இருந்த எஸ் ஏ சந்திரசேகர் இந்த படம் நிச்சயம் ஹிட் ஆகும் பிறகு உனது சம்பளம் அதிகரிக்கும் எனக் கூறி விஜயை நடிக்க வைத்து உள்ளாராம்.

இதே போல் இன்னொரு சம்பவமும் அரங்கேறி உள்ளது, நினைத்தேன் வந்தாய் படத்தில் முதலில் நடிப்பதற்கு விஜய்க்கு சுத்தமாக விருப்பம் இல்லையாம் இந்த படமும் தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும் இந்த படத்தின் உரிமையை எஸ் ஏ சந்திரசேகர் விட்டு விஜயை நடிக்க சொல்லி உள்ளார், ஆனால் விஜய் இந்த படத்தின் கதை ரொம்ப பழசாக இருக்கு இதிலும் ஹீரோயின்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் நான் நடிக்கவில்லை எனக் கூற..

பின் சந்திரசேகர் இந்த படம் ஹிட்டான ரம்பா படம் என்றோ, தேவயானி படம் என்றோ சொல்ல மாட்டார்கள் விஜய் படம் என்று தான் சொல்வார்கள், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உனது சம்பளம் அதிகரிக்கும் எனக் கூறிய பின் விஜய் நினைத்தேன் வந்தாய் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாராம்.. சந்திரசேகர் வற்புறுத்தி விஜய் நடித்த இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment