வசூலை வாரி குவிக்க விடுதலை அடுத்த அப்டேட்டை வெளியிட்ட பட குழு…!

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியாகி தற்பொழுது வரை மாபெரும் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் விடுதலை காமெடி நடிகர் சூரி இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தியுள்ளது அனைவரையும் ஆழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து பார்த்தால் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் வசூலும் ஓரளவுக்கு நன்றாகவே வசூல் வந்து இருக்கிறது எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் விடுதலை திரைப்படத்தை தெலுங்கில் விடுதலா என்ற பெயரில் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிடப் போவதாக தகவல் ஒன்று இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளதாம். ஏற்கனவே வெற்றிமாறனின் திரைப்படங்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

ஆம் பொல்லாதவன் திரைப்படத்தை குர்ராடு என்ற பெயரில் வெளியிடப்பட்டது அது போல தான் அசுரன் திரைப்படத்தையும் நரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளதாம். மேலும் தெலுங்கு திரையுலகில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நல்ல பெயர் உண்டு என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் வெளியாக இருக்கிறதாம் அந்த திரைப்படத்துடன் விடுதலை திரைப்படத்தையும் சேர்த்து வெளியிடப் போவதாக ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vetri maran
vetri maran

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க வெற்றிமாறனை பார்த்து ரசிகர்கள் பலரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்பது மட்டும் எங்களுக்கு தெரிந்தால் போதும் என கூறி வருவது மட்டுமல்லாமல் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இன்னும் ஒரு சில சிறு சிறு வேலைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.