பத்து தல படத்தின் அடுத்த அப்டேட் கொடுத்த படகுழு.! மிகப் பிரமாண்டமாக உருவாகும் ஆடியோ லான்ச்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சிம்பு இவர் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி திரையில் வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி வைரலானது.

அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து பத்து தல படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது இதன்னை தொடர்ந்து இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து கௌதம் கார்த்திக் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் அவருடன் பலர் நடித்திருக்கிறார்கள் இந்த திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சிம்பு அவர்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் குறித்த அப்டேட்டை டீசரில் படக்குழு வெளியிட்டிருந்தது. அந்த அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது பத்து தல இசை வெளியீட்டு விழா குறித்து தற்போது ஒரு அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சிம்பு நடிப்பில் உருவாக்கிய பத்து தல படத்தின் ஆடியோ லான்ச் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு விருந்தினராக பல முன்னணி நடிகர்கள் வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பத்து தல படத்தின் பாடல்களை ஏ ஆர் ரகுமான் நேரலையில் இசையமைக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Comment