இயக்குனர் தவறு செய்ததால் படம் தோல்வி.! மீண்டும் அதே நிறுவனத்திருக்கு படத்தை கொடுத்த தல.!

ajith-tamil360newz
ajith-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தற்பொழுது நடிகராகவும் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளார் இதை தொடர்ந்து அவர் பல படங்களை இயக்கவும் நடிக்கவும் உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளன.

இவர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால் இப்படத்தில் தல அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அஜித்துடன் அருண் விஜய், அனுஷ்கா, திரிஷா, விவேக் போன்ற பல நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தனர் இப்படம் திரையரங்கில் வெளிவந்த நல்லதொரு வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து இப்படத்தின் பிரபல தயாரிப்பாளரான ராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியது இப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாக நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக கொஞ்சம் சறுக்கலை ஏற்படுத்திய இதற்குக் காரணம் கவுதம் மேனன் செய்த சதி தான் காரணம் என்று கூறினார்.

இப்படம் நஷ்டம் என்பதை உணர்ந்த அஜித் அவர்கள் அடுத்த படத்தையும் ரத்தினத்திற்கு கொடுத்தார். இதனையறிந்த தல ரசிகர்கள் இதனால் தான் தல உயர்ந்தவர் என்று கூறுகின்றார்கள்.