விஜயின் 66 வது பட நடிகையை உறுதியாக லாக் செய்த படக்குழு.! நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

தளபதி விஜய் பீஸ்ட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜயுடன் கைகொடுத்து ஆபரணம் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு  மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர். இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனக்கே உரிய பாணியில்  இளம் இயக்குனர் நெல்சன் இந்த படத்தை எடுத்துள்ளார். பீஸ்ட் படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கை கோர்த்தது தனது 66வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை மிகப் பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜூ என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர், நடிகைகளை தற்போது படக்குழு தேர்வு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதிலும் குறிப்பாக தளபதி விஜய்க்கு ஜோடியாக எந்த நடிகையை செலக்ட் செய்யலாம் என படக்குழு மண்டையை பிச்சிக் கொண்டு இருந்தது.

முதலில் கீர்த்தி சுரேஷ் அதன்பிறகு ராஷ்மிகா மந்தனா இப்போ பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன், தீஷா பாட்ணி என கூறி வந்தனர். ஆனால் படக்குழு யாரை செலக்ட் செய்யவும் இல்லை இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு வழியாக  வந்த தகவலின் படி தளபதி 66  திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் பேசப்பட்ட ராஷ்மிகா மந்தனா தான்..

நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை தெரிவிக்கும் என தகவல்கள் வெளிவருகின்றன. முதல் முறையாக தளபதி விஜயுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க போவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Leave a Comment