துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு.! பின்னாடி இப்படி ஒரு காரணமா.?

நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் நிறைய திரைப்படங்களின் அப்டேட்களை ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தங்கலான் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை ரசிகர்களுக்காக பட குழு வெளியிட்டது அதனை தொடர்ந்து தற்பொழுது துருவ நட்சத்திரம் திரைப்படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்த்திபன்,ஐஸ்வர்யா ராஜேஷ்,சரத்குமார்,சிம்ரன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு உருவான இந்த திரைப்படம் ஒரு சில காரணங்கள் குறித்து இன்னும் வெளியாகவில்லை ஆனால் தற்பொழுது இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக நிதி பிரச்சனையால் தான் இந்த திரைப்படம் வெளியாகவில்லை என பல சினிமா பிரபலங்களும் கூறிவந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து உள்ளார் அதில் விரைவில் ஜான் உங்களை சந்திப்பார் என்றும் போடப்பட்டுள்ளது.

மேலும் இந்த போஸ்டர் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் விக்ரம் மற்றும் பல சினிமா பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தையும் இவரது ரசிகர்கள் மிக ஆளுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்த போஸ்டரை பார்த்த ஒரு சில ரசிகர்கள் விக்ரம் நடிப்பில் உருவாகி பல வருடங்கள் வெளியாகாமல் இருக்கும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எப்பொழுது வெளிவரும் என்பது பற்றி அப்டேட் கொடுங்கள் எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment