சமுத்திரகனியின் அடுத்த பட “ப்ரஸ்ட் லுக் போஸ்டரை” வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன படக்குழு.! கொண்டாடும் ரசிகர்கள்.

0

சினிமா உலகில் இயக்குனராக அவதாரம் எடுத்து பின் நாட்களில் நடிகராக மிகப்பெரிய உச்சத்தை தொட்டவர் நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி. தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் சமுத்திரகனி.

தற்போது பெரும்பாலும் நடிப்பதையே பெரிதும் விரும்புகிறார்கள் காரணம் தமிழ் சினிமாவையும் தாண்டி பிற மொழிகளான தெலுங்கு, கன்னடம் போன்றவற்றில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன. அதனால் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டு நடிப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தெலுங்கு படம் ஒன்றில் சமுத்திரகனி நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு “பஞ்சதந்திரம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த படத்தில் இவருடன் இணைந்து பரமானந்தம், சுவாதி ரெட்டி, ஷிவாத்மிகா ராஜசேகர், ராகுல், விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை ஹர்ஷா புலிகா என்பவர் எழுதி இயக்கி வருகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி நடிப்பை பற்றி சமீபத்தில் இயக்குனர் கூறியுள்ளார் அவர் கூறியது சினிமா உலகில் ஒரு சிறந்த மனிதர் இவர் எங்கள் படத்தில் நடிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.

அவரது நடிப்பு இந்த திரைப்படத்தில் மேலும் விரிவுப்படும் அந்த அளவிற்கு தனது சிறந்த நடிப்பை பஞ்சதந்திரம் படத்தில் காட்டி உள்ளார். இந்த  திரைப்படம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டார்.

சமுத்திரகனியின் பிறந்தநாளான முன்னிட்டு அவருடைய ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது படக்குழு . இதோ அந்த கைப்படம்.