பிறந்தநாள் ஸ்பெஷல்.. கல்கி திரைப்படத்தில் அமிதாப்பச்சனின் மாஸ் கெட்டப்பை வெளியிட்ட படக்குழு

Amitabh Bachchan : பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றுள்ள அவர் பிரபாஸ். இவர் நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு படமே மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது அப்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆதிபருஷ் படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது.

அதனை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் aswani dutt தயாரிப்பில் கல்கி திரைப்படம் 600 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். ஹீரோவாக பிரபாஸ் நடிகிறார் மேலும் ஹிந்தி டாப் நடிகை தீபிகா படுகோன், துல்கர் சல்மான், அமிதாப்பச்சன்..

கமலஹாசன், திஷா பதானி, ரானா டகுபதி,  நவீன் சிங் என மிகப் பெரிய நட்சத்திர திரைப் பட்டாளமே நடிக்க உள்ளது குறிப்பாக இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இந்திய சினிமாவில் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இன்று பிறந்தநாள் காணும் அமிதாப்பச்சனுக்கு கல்கி படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

அந்த போஸ்டரில் அமிதாபச்சன் முழுக்க முழுக்க ஒரே சாமியார் போல தெரிகிறார்.  முகத்தில் அவர் துணியை கட்டிக்கொண்டு மாஸ் அவதாரத்தில் இருக்கிறார். இதோ அமிதாப் பச்சன் பிறந்த நாளை முன்னிட்டு கல்கிப் படத்திலிருந்து வெளியான அந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்.

Amithap patchan
Amithap patchan