சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தின் புதிய அப்டேட்டைவெளியிட்ட பட குழுவினர்கள்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.மேலும் இவர்களைத் தொடர்ந்து இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இவ்வாறு பல கூட்டணியில் உருவாகியுள்ள அமைந்த திரைப்படத்திற்கு தமிழ் அவர்கள் இசையமைத்துள்ளார் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக் குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள் அதாவது பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று வெளியாகும் என்றும் அதற்கான ஒரு போஸ்டரையும் வெளியிட்டு அறிவித்துள்ளார்கள்.மேலும் பல நாட்களாக இந்த திரைப்படத்தினை பற்றி அப்டேட்டுகள் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ள இந்த அப்டேட்டைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் ,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது மேலும் பிரின்ஸ் திரைப்படமும் நல்ல கதை அம்சத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.

Leave a Comment