41 வயதில் 48 வது திரைப்படமா..? அனுஷ்காவின் பிறந்தநாளை பிரம்மிக்க வைத்த பட குழுவினர்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இன்று வரை ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை அனுஷ்கா இப்பொழுது 41 வயது நெருங்கிய நிலையில் இந்த பிறந்த நாளை மிகப் பிரமாண்டமாக அவருடைய ரசிகர்களும் உறவினர்களும் கொண்டாடி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் அனுஷ்காவின் 41வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 48வது பட அப்டேட்டை வெளியிட உள்ளார்கள்.

நடிகை அனுஷ்கா தற்பொழுது தமிழ் திரைப்படங்களில் பெரும் அளவு நடிக்காவிட்டாலும் இதற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா மற்றும் அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விஜயுடன் வேட்டைக்காரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் சூர்யாவுடன் இந்த சிங்கம் திரைப்படத்தில் பல்வேறு பாகங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக நடிகர் அனுஷ்கா அவர்கள் திரைப்படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் மட்டுமே நடிப்பதை பெரிதும் விரும்புவார் அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக உலக அளவில் மிகவும் பிரபலமாகிவிட்டார் அனுஷ்கா.

இன் நிலையில் அனுஷ்காவின் பிறந்தநாள் இன்று ரசிகர்கள் கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள் இந்நிலையில் சற்று முன் அனுஷ்கா நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தினை வெளியிட்டுள்ளார்கள்.

தற்போது அனுஷ்கா நடிக்க இருக்கும் அந்த திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்ட படகுழுவினர்கள் அவருக்கு அதிர்ச்சி கொடுத்தது மட்டுமில்லாமல் இதில் நடிகை அனுஷ்கா அவர்கள் குக்கிங் செக்ஃப் கேரக்டரில் நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்கள்.

anushka birth
anushka birth

Leave a Comment