தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நாம் எந்த மாதிரியான கதைகளத்தில் நடித்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் அந்த படம் ஓடும் என்பதை நன்கு புரிந்து கொண்டு அவர் நடிப்பதால் திரை உலகில் வெற்றி மேல் வெற்றியை கொடுத்து இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் போன்ற படங்கள் வசூல் ரீதியாக 100 கோடி அள்ளின..
இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கையில் அயாலன், மாவீரன், பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. அதிலும் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பிரன்ஸ் திரைப்படம் வெளியாகும் என படகுழு முன்பு கூறியது. பிரன்ஸ் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து சத்யராஜ், மரியா, பிரேம்ஜி மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தை அனுதீப் இயக்கி உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்டிக், ட்ராமா, ஆக்சன் என அனைத்தும் கலந்த படமாக உருவாகி உள்ளது மற்ற படங்கள் போலவே இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றன..
இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின் இயக்குனர் சில தகவல்களை கொடுத்துள்ளார்.. அது என்னவென்றால் கார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளிவராது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என திட்டவட்டமாக அவர் கூறியுள்ளார்.
இப்படி செய்வதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என படக்குழு திட்டமிட்டு உள்ளதாம். இதை அறிந்த ரசிகர்கள் அப்படி என்றால் டாக்டர், டான் வரிசையில் பிரின்ஸ் திரைப்படமும் 100 கோடி வசூலை அள்ளும் என ரசிகர்கள் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.