யானை OTT ரிலீஸ் தேதியை உறுதிசெய்த படக்குழு.! ரசிகரகள் கொண்டாட்டம்

yaanai
yaanai

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது பல வெற்றி திரைப்படங்களை தந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அருண் விஜய்.இவர் பெரும்பாலும் சிறந்த கதைக்களம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் கடைசியாக இயக்குனர் ஹரியுடன் கைகோர்த்து அருண் விஜய் நடிப்பில் ஜூலை 1ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் யானை.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமப்புற பின்னணியை வைத்து உருவானது மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது யானை திரைப்படம் இந்த வார இறுதிக்குள் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறியுள்ளார்கள் மேலும் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று பிரபல ஓட்டிடித்தனமான ZEE5 ஸ்ட்ரீமிங் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தனது பழைய திரைப்படங்கள் போல் கமர்சியல் திரைப்படத்தை உருவாக்கி மீண்டும் ரீஎட்ன்றி கொடுத்துள்ளார் ஹரி.

இதன் காரணமாக பல பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.நடிப்பால் மிரட்டி உள்ள அருண் விஜய்யின் கதாபாத்திரத்தினை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள் இவர்களை தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார் மேலும் யானை திரைப்படத்தில் ராதிகா சரத்குமார்,யோகி பாபு, சமுத்திரகனி, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.