புளு சட்டை மாறன் இயக்கும் “ஆன்டி இந்தியன்” படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்ய முடிவு எடுத்துயுள்ளது படக்குழு.? சென்சார் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாம்.

0

தமிழில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகி மக்களை மகிழ்விக்கின்றன. அப்படிப்பட்ட படத்தை விமர்சனம் என்ற பெயரில் பலர் நல்ல விதமாகவும் கெட்ட விதமாகவும் சொல்கின்றனர். ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் விமர்சனம் என்ற பெயரில் எல்லா படத்தையும் கழுவி ஊற்றிய வருகிறார் அவர் தான் புளூ சட்டை மாறன்.

என்னதான் படத்தை தழுவி ஊற்றி வந்தாலும் ரசிகர்கள் இவரது பேச்சில் மயங்கி அதை கண்டு களித்தான் வருகின்றனர். ஒரு புது படம் வெளியாகி நாள் கூட ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து உள்ளாரா என்று தான் முதலில் யூட்யூபில்  தேடுகின்றனர்.

இந்த அளவிற்கு கழுவி ஊற்றிய மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இளம் நடிகர்கள் தொடங்கி டாப் நடிகரான ரஜினி, அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற அனைத்து நடிகர்களின் படங்களையும் கழிவு விடுவதுதான் இவரது ஸ்பெஷல். இவரை அதற்காக ரசிகர்கள் சும்மா எல்லாம் விட்டுவிடவில்லை கமெண்ட்  மூலமாகவும் அவரை கழுவி ஊற்றிய வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனக்கு என்ன வருமோ அதையே தான் தனது விமர்சனத்தின் மூலம் சொல்லி வருகின்றார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவரை ரசிகர்கள் நீங்கள் ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என கோபத்தில் திட்டி தீர்த்த நிலையில் அதன்படி தற்போது இவர் anti-indian என்ற பெயரில் ஒரு புதிய படத்தை இயக்கி இயக்கினார் அந்த படம் தற்போது சென்சார் செய்வதற்காக தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதைப் பார்த்த தணிக்கைக் குழு உங்களது பாதத்தை பார்த்தால் பல இடங்களில் கத்தரி போட்டு எடுக்க வேண்டும் என கூறினர்.

தற்பொழுது அது இல்லாமல் எப்படியோ யு ஏ சான்றிதழ் வாங்கியது ஆன்டி இந்தியன் படக்குழு. தற்பொழுது ப்ளூ சட்டை மாறன் எடுத்துள்ள ஆன்டி இந்தியன் திரைப்படம் அடுத்த மாதம் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது இதனால் தற்போது ரசிகர்கள் பலரும் இவரது படத்தை எதிர்நோக்கி காத்திருப்பது மட்டுமல்லாமல் விமர்சனம் செய்ய ரெடியாகும் இருக்கின்றனர்.