வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு..! உற்சாகத்தில் ரசிகர்கள்.

தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கைகோர்த்து வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறதாம். வாரிசு படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் சூட்டிங் சென்னை ஹைதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக சென்று வருகின்ற நிலையில் கடைசியாக விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் சூட்டிங் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்காக விஜய் ஹைதராபாத் சென்றுள்ளார் என கூறப்படுகிறது. ஏனென்றால் அண்மையில் வரலட்சுமி சரத்குமார் உடன் விஜய் இணைந்து ஹைதராபாத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியது இதனால் வாரிசு பட சூட்டிங்காக விஜய் அங்கு சென்று இருப்பார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, பிரபு, குஷ்பூ, ஷாம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, சங்கீதா போன்ற பல நடிகர் நடிகைகளும் நடித்து வருவதாக  கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் தகவல்கள் என வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அதனால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்து வருகின்றன. இந்த படத்தை இயக்குனர் தில்ராஜூ அடுத்த வருடம் பொங்கல் அன்று வெளியிட தயார் செய்து வருகிறார்.

வாரிசு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருவதால் கூடிய விரைவில் முடிந்து விடும் என தெரிய வருகிறது. தற்போதும் வாரிசு படத்தில் இருந்து ஒரு  முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இதுவரை இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகிய நிலையில் வருகின்ற தீபாவளி அன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment