ரசிகர்களுக்கு போஸ்டர் உடன் சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.!

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்பு நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தற்பொழுது தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் தான் சூர்யா இவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இதனை தொடர்ந்து பார்த்தால் சூர்யாவின் நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவிட்டார்.அதனைத் தொடர்ந்து தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் 3D படமான சூர்ய 42 இல் நடித்து வருகிறார்.

10 மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறதம் மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தைப் பற்றி ரசிகர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயம் என்றால் அது இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி தான் ஆனால் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்த பட குழு தற்பொழுது அறிவித்துள்ளது.

ஆம் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 9:5மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ போஸ்டர் உடன் பட குழு வெளியிட்டுள்ளது மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சூர்யா இந்த திரைப்படத்தை தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தில் எப்பொழுது நடிப்பார் அவரது நடிப்பில் இன்னும் எத்தனை திரைப்படங்கள் உருவாக இருக்கிறது.

சூர்யா 42 டைட்டில் என்னவாக இருக்கும் படும் பயங்கரமாக இந்த தலைப்பு இருக்கப் போகிறது என்பது மட்டும் எங்களுக்கு தெரியும் எனக்கூறி கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இந்த போஸ்டரை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு சூர்யாவின் 42 டைட்டில் எப்பொழுது தெரியுமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment