படம் வெளியாவதற்கு முன்பே பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல்..! கெத்து காட்டும் பிரபுதேவாவின் திரைப்படம்..!

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் நடன இயக்குனராகவும் இயக்குனராகவும் தன்னுடைய திறனை வழிகாட்டி வரும் ஒரு நடிகர் என்றால் அது பிரபுதேவா தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் மைடியர் பூதம் என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் ட்ரெய்லர் ஆறு மாதங்களுக்கு முன்பாக வெளிவந்த நிலையில் தற்பொழுது இந்த திரைப்படம் மிக விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பொதுவாக நடிகர் பிரபுதேவாவை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுவது வழக்கம்.

அந்த வகையில் இவர் பாலிவுட் கோலிவுட் என பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இயக்குனர் ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் இணைந்து மை டியர் பூதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் அதிக அளவு மாயாஜாலங்கள் நிறைந்த திரைப்படம் என்பதன் காரணமாக குழந்தைகள் மத்தியில் மிகப் பெரும் அளவு எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் உருவாக்கியது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் எடுப்பதற்கு சுமார் 7 கோடி பட்ஜெட் செலவாகி உள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே தற்பொழுது 15 கோடிக்கு இந்த திரைப்படம் லாபம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. படக்குவினர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டும் இல்லாமல் கண்டிப்பாக திரைப்படம் திரையில் வெளியானால் மிகப்பெரிய வசூலை எட்டும் என கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் நடிகர் பிரபுதேவா அவர்கள் இந்த திரைப்படத்தில் மொட்டை அடித்துக் கொண்டும் மீசை தாடி இல்லாமலும் சில காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செயல்கள் அனைத்தும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக தான் என பிரபுதேவா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version