நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக சூரரைப்போற்று திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து நவரசா என்ற வெப் சீரிஸ் வெளியாகியது அதன் பின் எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதை எல்லாம் முடிந்த பிறகு வாடிவாசல் திரைப்படத்தில் அவர் வெற்றிமாறனுடன் முதல்முறையாக கைகோர்க்கிறார். இதனால் நடிகர் சூர்யாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். மேலும் சூர்யாவும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் காரணம் சிறந்த இயக்குனர்கள் என்பதால் தற்போது தொடர்ந்து வெற்றியை கொடுத்தது முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்க முயற்சிக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் ஒருமுறை பெண் இயக்குனரான சுதா கொங்கரா அவர்களுடன் சூர்யா இணைய உள்ளார். சூர்யா தோல்வியில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது சூரரைப்போற்று என்ற திரைப்படத்தை கொடுத்து அழகு பார்த்த நிலையில் மீண்டும் சூர்யாவுக்கு ஒரு நல்ல கதையை சொல்லி உள்ளார் சுதா கொங்கராவ்.

அதற்கு முன்பாக ஆர்யாவை வைத்து ஒரு படத்தை எடுப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்தப் படம் தள்ளி போய் உள்ளது அதனால் தற்போது சூர்யாவை வைத்து உடனே அந்த படத்தை எடுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. சூர்யாவும் சுதா கொங்கரவும் இரண்டாவது முறையாக இணைந்து ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படத்தில் பணியாற்ற உள்ளனர் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் அமைக்கும் வேலைகளை இயக்குனர் நலன் குமாரசாமி ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன எது எப்படியோ மீண்டும் இந்த கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றால் சூப்பராக இருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்தது.