KGF பட ஹீரோ யாஷ் – க்கு பிடித்த தமிழ் திரைப்படம் எது தெரியுமா.? தெரிஞ்ச ஆச்சரியப்படுவீங்க..

சினிமா உலகில் ஒரு படம் போட்ட பணத்தை விட அதிக மடங்கு லாபத்தை பார்க்க ஒரு வழிதான் இருக்கிறது அதாவது டாப் நடிகர்களின் படங்களாக இருந்தாலும் சரி , வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களாக இருந்தாலும் சரி சோலோவாக களம் இறங்கினால் அந்த படம் நிச்சயம் லாபத்தை எடுக்கும்.

தற்போது தமிழ் சினிமா பின்பற்றி வருகிறது சில எதிர்பாராத விதமாக ஒரு சில படங்கள் நேருக்கு நேர் மோதி விடுகின்றன அப்படி அண்மையில் விஜயின் பீஸ்ட் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகியது மறுநாளே நடிகர் யாஷின் கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியாகியது பீஸ்ட் படத்தைவிட கே ஜி எஃப் 2 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

படமும் வெளிவந்து ஆசையை பூர்த்தி செய்தால் தற்போது பீஸ்ட் படத்தை பின்னுக்கு தள்ளி கே ஜி எஃப் 2  ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமெண்ட் கலந்த படமாக இருந்ததால் தற்போது ரசிகர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை பலரும் பார்த்து கொண்டாடுகின்றனர் தமிழகத்தில் ஆரம்பத்தில் 250 திரையரங்குகளில் படம் ரிலீஸானது.

ஆனால் இந்த படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் தற்போது பல்வேறு திரையரங்குகளில் கேஜிஎப் 2 இன்னும் வெளியிடப்பட்டு வருகிறது இதனால் நல்ல வரவேற்பு பெறுவதோடு வசூலிலும் அடித்து நொறுக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்  படக்குழுவும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கின்றது.

இப்படி இருக்கின்ற நிலையில் கே ஜி எஃப் 2 பட நடிகர் ராக்கி பாய் சமீபத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்பது  குறித்து தகவல் வெளியாகி உள்ளது. KGF 2 திரைப்படத்தை பல சினிமா பிரபலங்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கே ஜி எஃப் படத்தைப் பார்த்து விட்டு ஒரு புதிய பதிவை போட்டார்.

இதற்கு பதிலளித்த யாஷ் நன்றி சகோதரரே என கூறினார். மேலும் உங்களுடைய டாக்டர் படம் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று கூறினார் அதற்கு சிவகார்த்திகேயனும் சகோதரரே நீங்கள் டாக்டர் படத்தை விரும்பிப் பார்த்ததில் மகிழ்ச்சி என கூறினார். நடிகர் யாஷ் – க்கு ரொம்ப பிடித்த திரைப்படம் டாக்டர் திரைப்படம் தானாம்.

Leave a Comment