வாக்களிக்க சென்ற இடத்தில் செல்பி எடுத்து அஜித்தை தொந்தரவு செய்த ரசிகர்.! மொபைலை பிடிங்கிய தல அஜித்.! வைரலாகும் வீடியோ.

0

இன்று காலை 7 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் பல பிரபலங்கள் வெயிலுக்கு முன்பே வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகிறார்கள்.

கோடை வெயில் இந்த வருடம் அதிகமாக காணப்படுவதால் மக்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் வெயிலுக்கு முன்பு காலையிலேயே வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் காலையிலேயே தங்களது வாக்கை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சினிமா பிரபலங்களான ரஜினி கமல் சிவகுமார் அஜித் சிவகார்த்திகேயன் சூர்யா கார்த்தி உள்ளிட்டோர் வாக்குச்சாவடியில் முக கவசம் அணிந்து தங்களது வாக்கை பதிவு செய்துள்ளார்கள்.

அதேபோல் தல அஜீத் தன்னுடைய மனைவியுடன் பொதுமக்களுடன் வரிசையாக நின்று வாக்களிக்க சென்றுள்ளார் அப்பொழுது ரசிகர்கள் அஜித்தை சூழ்ந்து கொண்டார்கள் அதனால் அஜித் திக்கு முக்காடினார்.

ஷாலினி வரிசையாக நின்று முதலில் தங்களது வாக்கு பதிவு செய்ய சென்றுவிட்டார் பின்னாடி வந்த அஜீத்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது அது மட்டுமில்லாமல் பலரும் வீடியோ எடுத்து அஜித்தை தொந்தரவு செய்துள்ளார்கள்.  அப்பொழுது ரசிகர் ஒருவர் தன்னுடைய மொபைலை அஜித்தின் பக்கத்தில் வைத்து செல்பி புகைப்படம் எடுத்துள்ளார் அதற்கு அஜித் கோபப்பட்டு மொபைலை பிடுங்கி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் வாக்களிக்க சென்ற இடத்தில் சிலர் செல்பி எடுக்க முயற்சித்தது அஜித்தை கோப படுத்தியுள்ளது இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.  முதன் முறையாக அஜித் இவ்வாறு கோபப்பட்டது ரசிகர்களிடையே கொஞ்சம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் அந்த சூழ்நிலையில் தங்களது கடமையை செய்ய விடாமல் குறுக்கிட்ட பொழுது தான் அஜித் இவ்வாறு நடந்து கொண்டார் அதனால் அஜித்திற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதோ வீடியோ