உங்க அப்பா பணத்தை செலவழிக்கதே என்று கூறிய ரசிகர்.. தனது பாணியில் பதிலடி கொடுத்த சச்சின் மகள் சாரா.!

கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் மகள் சாராவுக்கு அட்வைஸ் கொடுத்த ரசிகர் தனது பாணியில் பதிலடி கொடுத்த சாரா.கிரிக்கெட் உலகில் பல்வேறு திறமையுள்ள கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் தலைவனாக வலம் வந்தவர் சச்சின் டெண்டுல்கர்.

ஒரு பவுலர் பந்து வீசும் போது அது எந்த திசையில் அடிக்க வேண்டும் எப்படி எடுத்தால் அந்த பந்து பில்டர் தாண்டி போகும் என்பதை நன்கு கணித்து அதற்கு ஏற்றார் போல தனது பேட்டியை வெளிப்படுத்தக் கூடியவர் சச்சின்.

25 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் உலகில் காலூன்றி  தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே படைத்தவர்.இவர் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார் அவை ஒவ்வொன்றும் விரல்விட்டு என்னும் அளவுக்கு இல்லை நாம் சொல்ல முடியாத அளவிற்கு பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளார்.

தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தனது குடும்பத்துடன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர் 1995 ஆம் ஆண்டு டாக்டர் அஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாரா என்ற மகளும் அர்ஜுன் என்ற மகனும் இருக்கிறார்.சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

சச்சின் மகள் தற்பொழுது கல்லூரி படிப்பை முடித்து உள்ளார். சச்சின் கிரிக்கெட் விளையாட்டை தவிர வேறு எந்த மீடியா வெளிச்சத்திலும் அவ்வளவு சீக்கிரத்தில் தென்பட மாட்டார். அதுபோலவே தன் குடும்பத்தையும் வைத்திருக்கிறார் ஆனால் இருப்பினும் சாரா பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் காபி குடிக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார் அதை பார்த்த ரசிகர் ஒருவர் உன் அப்பா பணத்தை அழிக்காதே என்று மெசேஜ் செய்ய உடனடியாக காபிக்காக செலவு செய்வது நன்றான செலவு தானே என்று அர்த்தம் என சொன்னார் அதை நாம் வீணாக்குவந்தாக இல்லை என சொல்லி அவருக்கு பதிலடி கொடுத்தார்.

Leave a Comment