குஷி பட கிளைமாக்ஸை மாற்ற சொன்ன ரசிகர்.! தரமான பதிலடி கொடுத்த எஸ் ஜே சூர்யா.!

தமிழ் சினிமாவில் என்னதான் பல இயக்குனர்கள் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்து வந்தாலும் தனது கதையை ரசிகர்களுக்கு வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து கதை எழுதும் இயக்குனர்தான் எஸ் ஜே சூர்யா இவர் ஆரம்ப காலகட்டத்தில் இயக்கிய நிறைய திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அந்த வகையில் பார்த்தால் இவர் அஜித்தை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கி அதை ரசிகர்களிடம் வெற்றி காண வைத்தார் அந்த திரைப்படம் ரசிகர்களிடையே வெளியான பொழுது பல கோடி வசூல் செய்து விட்டது அதனை அடுத்து விஜய்யுடன் இணைந்து குஷி என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படமும் வெளியான பொழுது வாலி திரைப்படத்தை விட அதிகமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் கூற வேண்டும்.

அதிலும் குறிப்பாக இதில் விஜயின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் அவரைப் பாராட்டினார்கள் மேலும் எஸ் ஜே சூர்யாவிற்கு பல நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பும் கிடைத்து விட்டது மிகவும் இரண்டு ஹிட்டடித்த திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்களை ஓவர்டேக் செய்து விட்டார்.

இவ்வாறு பிரபலமடைந்த இயக்குனர் எஸ் ஜே சூர்யா ஒரு சில திரைப்படங்களை இவரே இயக்கி இவரே நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்தது தான் இந்நிலையில் குஷி படத்தை பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆம் அந்த தகவல் என்னவென்றால் சமீபத்தில் குஷி திரைப்படம் கே டிவியில் ஒளிபரப்பானதாம் இதைப் பார்த்த ஒரு ரசிகர் கிளைமாக்ஸ் சீனில் மட்டும் செல்போன் இருந்திருந்தால் மிகவும் படம் நன்றாக இருப்பது மட்டுமல்லாமல் 15 நிமிடத்திற்கு முன்பே படம் முடிந்து இருக்கும் என எஸ்ஜே சூர்யாவிற்கு ஒரு பதிவை அனுப்பியுள்ளார்.

sj surya7
sj surya7

அதுமட்டுமல்லாமல் இதனை பார்த்த எஸ் ஜே சூர்யா அந்த ரசிகருக்கு சரியான பதில் ஒன்று கூறியுள்ளார் அதாவது காதல் வழியில் செல்போனை தொலைத்து விட்டு அதனை வைத்து கதையை மாற்றி விடுவேன் என அந்த ரசிகருக்கு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் எஸ் ஜே சூர்யா செய்தது தான் சரி என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment