பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படி நடக்கிறதா என்று கேட்ட ரசிகர்.? இசைவாணி சொன்ன பதில் என்ன தெரியுமா.?

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் இதுவரை நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 5வது கட்ட சீசன் தற்போது வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது இதுவரை 50 நாட்களைத் தாண்டிய நிலையில் பல்வேறு போட்டியாளர்கள் வெளியே சென்று உள்ளனர்.

மீதியிருக்கும் போட்டியாளர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதால் இனி பிக் பாஸ் வீட்டில் ஒரு ரணகளம் வெடிக்கும் என்பது நன்றாகவே தெரியவந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் ஒரு சில எதிர்பார்க்காத பிரபலங்கள் கூட வெளியேறி உள்ளனர் அந்த வகையில் நமித மாரிமுத்து, இசைவாணி ஆகியவர்கள் பிக் பாஸ் வீட்டில் குறைந்தது 80 நாட்களுக்கும் மேல் இருப்பார்கள் என கணிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் வெளியேறியது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டு முட்டி மோதுவதால் எதிர்பார்க்காத போட்டியாளர்கள் கூட வெளியேறி விடுகின்றனர் அந்தவகையில் இசைவானியும் ஒருவர் இவர் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வந்தாலும்..

ஒரு சிலர் இவரை மிக கடுமையாக விமர்சித்து அவர் திறமையை வெளிக்காட்ட விடாமல் செய்து விட்டனர் ஒருவழியாக எப்படியோ பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தாலும் அவருக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளது மேலும் இவர் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் லைவ்வில் உரையாடும்போது பிக்பாஸ் குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் பேசி வருகிறார்.

அப்படி பேசும் போது ரசிகர் ஒருவர் இசைவானியிடம் உங்களுக்கு பிக்பாஸ் போட்டியாளர்களில் யாரை மிக பிடிக்கும் என கேட்ட கேள்விக்கு அவர் எனக்கு பாவனியை பிடிக்கும் என கூறியுள்ளார். அப்படி அண்மையில் இவர் லைவ்வில் பேசும் போது பிக் பாஸ் வீடு ஸ்க்ரிப்டின் படி நடக்கிறதா என கேட்டார் நிச்சயமாக கிடையாது என ஒரே வார்த்தையில் சொல்லி முடித்தார்.

Leave a Comment