டாக்டர் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பல கோடி கொடுத்து வாங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.?

விஜய் டிவி மூலம் தனது திறமைகளை வெளிப்படுத்தி தற்பொழுது சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன் இவர் விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் தான் மக்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான்.

விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு காமெடி நடிகனாக வலம் வரத் தொடங்கிய இவர் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி நடிகனாக நடித்து வந்தார் பின்பு கதாநாயகனாக நடிக்க ஆர்வம் காட்டி தற்போது கதாநாயகனாக நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்,வேலைக்காரன்,மிஸ்டர் லோக்கல்,ஹீரோ போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று நல்ல விமர்சனத்தையும் பெற்றிருந்தது.

இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் இன்னும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த டாக்டர் திரைப்படம் ஒரு சில காரணங்கள் குறித்து ரிலீஸ் தேதி தள்ளி போய் கொண்டே இருக்கிறது.

ஆம் இந்த படம் நேரடியாக OTT தலத்தில் தான் வெளியாகும் என பல வதந்திகள் பரவி வந்த நிலையில் அதனை தடுக்கும் வகையில் படக்குழுவினர் இந்த திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பதை உறுதி செய்தார்கள்.

sivakarthikeyan2
sivakarthikeyan2

இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது ஆம் டாக்டர் திரைப்படத்தை பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் டாக்டர் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை 34 கோடி கொடுத்து வாங்கி விட்டதாக இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆனால் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment