பகத் பாஸில் உடன் நடிக்க போறத நினைச்சாலே பயமாயிருக்கு.. புலம்பி தீர்க்கும் பிரபல தமிழ் நடிகர்.!

சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் எப்பொழுதுமே வெற்றியை ஈசியாக ருசிப்பார்கள். அந்த வகையில் உலகநாயகன் கமலஹாசன், சிவாஜி, அஜித், விஜய் போன்றவர்கள் தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கின்றனர். அந்த லிஸ்டில் தற்போது இடம்பெற்றுள்ளவர் தான் பகத் பாஸில்.

இவர் தென்னிந்திய சினிமா உலகில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அதில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது மேலும் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாக தான் அமைந்துள்ளன. ஏன் கடைசியாக கூட உலகநாயகன் கமலஹாசனின் விக்ரம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அது அந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. மேலும் கமலே வியந்து போய் அவரது நடிப்பை பார்த்ததாக சொல்லப்படுகிறது. பகத் பாஸில் கூட இருந்தவர்கள் கூட அவர் கண்களாலே நடிப்பார் எனவும் பலரும் கூறி வருகின்றனர் அந்த அளவிற்கு அவரிடம் திறமை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து  நடிகர் பகத் பாஸில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் கமிட்டாக உள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின் பகத் பாஸில் குறித்து பேசி உள்ளார். மாமன்னன் படத்தில் பகத் பாஸில் நடிகருகிறார் ஆனால் இதுவரை படப்பிடிப்பு தளத்திற்கு வரவில்லை வெகு விரைவிலேயே அவர் வர இருக்கிறார் நான் இதற்கு முன்பு அவரை ஒரு தடவை சந்தித்து அவரது நடிப்பை பற்றி பேசினேன் இப்பொழுது அவருடனே நடிக்க போகிறேன் அவர் எப்படிப்பட்ட நடிகர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

udhaya nithi

அவர் ஈசியாக நடித்து விட்டுவிடுவார் அதனால் நான் அவருக்கு இணையாக நடிப்பது சற்று சிரமம் அதிக டேக்குகள் கூட எடுக்க வாய்ப்புகள் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக பேசினார். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version