பொதுவாக சினிமாவை கொடுத்தவரை ஒருவர் சிறப்பாக நடித்தால் மட்டும் போதும் அவரால் தொடர்ந்து திரைப்படங்களை நடிப்பதற்கான வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் திறமை இருப்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களது வாய்ப்புகளை இழந்து வருகிறார்கள்.
அது நடிகராக இருந்தாலும், பாடகராக இருந்தாலும்,தயாரிப்பாளராக இருந்தாலும் அனைவருக்கும் ஒன்றுதான். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரபல பாடகரின் மகன் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்கு ஒதுங்கிவுள்ளார் என்ற பரிதாப நிலை பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது தமிழ் திரைவுலகில் பாடகராக அறிமுகமாகி பிறகு நடிப்பு,தயாரிப்பு என பல துறைகளில் தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தியவர் தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் தன்னுடைய அருமையான குரல் வளத்தினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டார் இப்படிப்பட்ட இவர் சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்தார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் சுமார் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிவுள்ளார். இவ்வாறு திறமை கொண்ட இவரின் தான் எஸ்பிபி சரவணன். தற்பொழுது இவருக்கு தான் பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம்.
பாடுவதில் தனது அப்பா போலவே திறமை கொண்ட இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். மேலும் இவர் சென்னை 28 உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவரின் முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இப்படிப்பட்ட நிலையில் இவர் தனக்கு சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்காதது பற்றி கூறியிருக்கிறார். என்னால் பாட முடியாது என்று நான் யாரிடமும் கூறியது கிடையாது ஆனால் இப்போது எனக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைப்பதில்லை என்று அவர் வருத்தப்பட்டு தெரிவித்துள்ளார். மேலும் தற்பொழுது நான் ஒரு தமிழ் படத்தை தயாரித்து வருகிறேன் விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் இதன் மூலம் தான் திரைப்படங்களை தயாரிக்கும் போடுவேன் என்றும் கூறியுள்ளார்.