“அண்ணாத்த” படத்தை மிகப்பெரிய ஒரு தொகை கொடுத்து கைபற்றிய பிரபல OTT நிறுவனம்.? அசந்துப்போன ரசிகர்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து கிராமத்துக் கதையில் நடித்துள்ளதால் ரசிகர்களும், ரஜினியும் செம்ம சந்தோஷத்தில் இருகின்றனர். அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி போன்ற ஒவ்வொருவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி உள்ளனர்.

இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளியை குறி வைத்து வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக இந்த படத்தில் இருந்து சில அப்டேட்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன சமீபத்தில் கூட இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா எடுத்துள்ளார் கிராமத்து கதையை எடுப்பதில் அவரை அடிச்சிக்க ஆளே இல்லை என கூறப்படுகிறது அந்த வகையில் அஜித்தை வைத்து இவர் வீரம், வேதாளம் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கின்றது.

திரைப்படம் திரையரங்கில் வெளியாகி னாலும் நான்கு வாரங்கள் கழித்து இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இருப்பினும் ரசிகர்கள் கேள்வி என்வென்றால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் sun next இருக்கும்போது ஏன் நெட்பிளிக்ஸ் என கேள்வி கேட்கத் தொடங்கி உள்ளனர்.

ஆனால்  மிகப்பெரிய ஒரு விலைக்கு அண்ணாத்த திரைப்படத்தை  கேட்டு உள்ளதால் அண்ணாத்த படத்தை கொடுத்து உள்ளனர். திரைஅரங்கிற்கு செல்ல முடியாதவர்கள் நான்கு வாரங்கள் கழித்து  நெட்பிளிக்ஸ் OTT தளத்திலேயே நீங்கள் இந்த திரைப்படத்தை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment