பூஜையே போடாத விஜய்யின் படத்தை கோடிகணக்கில் பணத்தை போட்டு கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய்  இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் அமைந்துள்ள ஒரு பாடல் யூடியூபில் பல மில்லியன்கள் பார்வையாளர்களை கடந்து சென்று சாதனை படைத்துள்ளது.

மேலும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் ஷாம், யோகி பாபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட பல திரைப்பட பிரபலங்கள்  நடித்த வருகின்றனர்.

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்த உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திரைப்படம் முடிந்த கையோடு நடிகர் விஜய் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி 67 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் நடிகராக நடித்து வந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுத்து படத்தை மேலும் புகழின் உச்சத்திற்கு கொண்டு சேர்த்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அதனைத் தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார் இந்த திரைப்படமும் வசூலில் உலக சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து விக்ரம் 2 எடுக்க உள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

பின்னர் நடிகர் விஜய் வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில்  தளபதி 67 திரைப்படத்தை பல கோடி ரூபாய்க்கு netflix OTT நிறுவனம் வாங்கியுள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனை அறிந்த நெட்டிசன்கள் தளபதி 67 படம் பூஜையே போடல அதுக்குள்ள அந்த படத்தை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்களா என்று ஆச்சரியத்தில்  உள்ளனர்.

Leave a Comment

Exit mobile version