தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வெங்கட் பிரபு தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான திரைப்படங்களை தந்து வரும் நிலையில் சமீபத்தில் சிம்பு நடித்த மாநாடு என்ற திரைப்படத்தினை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் அடுத்ததாக நடிகர் நாக சைதன்யாவை வைத்து படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக இளம் முன்னணி நடிகை கீர்த்தி செட்டி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .மேலும் இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கிச்சா சுதீப் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வந்துள்ள தகவலின் படி தமிழ் திரைவுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜீவா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்றாலும் விரைவில் இதனை பட குழுவினார்கள் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாக சைதன்யா கீர்த்தி செட்டி இணைந்து நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகி இரு மொழிகளிலும் உருவாகி வருவதாகவும் இந்த படத்தில் நாக சைதன்யா போலீஸ் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் எனவும் கூற முடிகிறது. இவ்வாறு முதல் முறையாக இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.