ஒரு புகைப்படத்தை வைத்து அரசியலை பற்றி தெள்ளத் தெளிவாக பதில் கொடுத்த பிரபல இயக்குனர்.! சமூக வலைதளபக்கத்தில் பரவும் செய்தி

தமிழ் சினிமாவில் சமூக அக்கரை உள்ள திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் இயக்குனர் தங்கர்பச்சான்.

சினிமாவையும் தாண்டி இவர் சமூக அக்கறை கொண்டவராக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மக்களின் பிரச்சனையை மீடியோ உலகிற்கு கொண்டு சேர்ப்பதோடு அவற்றில் வெற்றியும் பெற்றுக் கொடுக்கிறார்கள். இவருக்கென ஒரு தனி கூட்டம் சினிமாவையும் தாண்டி தற்போது நிஜ வாழ்க்கையிலும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அரசியல் குறித்து தனது கருத்தை அதிரடியாக தெரிவித்துள்ளார்.

வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது இதனையடுத்து இரு மாபெரும் கட்சிகள் தனது பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கி வருகிறது.

இப்படி இருக்கின்ற சூழலில் ஒரு புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அரசியல் குறித்து பதிவு ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியது: ஒரு பெண்மணி தனது வீட்டுக்கு வெளியே நிற்கிறார் அவரது வீட்டின் சுவற்றில் மாபெரும் இரு கட்சிகளான இரட்டைஇலை,  உதயசூரியன் ஆகியவையும் இடம் பெற்று இருக்கிறது.

இந்த இரு கட்சிகளும் இதற்கு முன்பு நடந்த தேர்தலின் போது பல இலவச பொருட்களை கொடுத்துள்ளது அந்த வீட்டின் முன்பு கிடக்கின்றன.

இந்த புகைப்படத்தை வெளியிட்ட தங்கர்பச்சான்  இந்த ஒரு புகைப்படம் தான் “தமிழக அரசியல் களத்தை பிரதிபலிக்கும்” என குறிப்பிட்டு ஒரு இருந்தார் மேலும் நான் பார்த்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இது தான் என குறிப்பிட்டார்.