“நானே வருவேன்” திரைப்படத்தில் தனுஷை மிரட்ட வில்லனாக களத்தில் இறங்கிய பிரபல இயக்குனர் – யார் அது தெரியுமா..?

சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்கும் பிரபலங்கள் பன்முக தன்மை கொண்டவராக மாறுகின்றனர் அந்த லிஸ்டில் தற்போது இணைந்து உள்ளவர்தான் செல்வராகவன். இயக்குனராக முதலில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது பல்வேறு படங்களில் நடித்து அசத்துகிறார்.

தமிழ் சினிமா உலகில் இவரது மார்க்கெட் தற்போது அதிகரித்துள்ளது. இயக்குனர் செல்வராகவன் முதலில் தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் அதனை தொடர்ந்து இவர் இயக்கிய புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் போன்ற அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென சாணி காயிரம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்து  அசத்தினார் அதனை தொடர்ந்து இப்போது தளபதி விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படி ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க செல்வராகவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் செல்வராகவன் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி, நடித்து சிகரம் தொட வாழ்த்துக்கள் எனக் கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.

இதனை அறிந்த ரசிகர்கள்  செல்வராகவன் அவர்கள் தொடர்ந்து படங்களில் நடிப்பது மிகப்பெரிய விஷயம் அதை தொடர்ந்து செய்யவேண்டும் என கமெண்டுகள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment