வரலாற்று கதையில் “விஜயை” நடிக்க வைக்க அணுகிய பிரபல இயக்குனர்..! வெளியே கசிந்த தகவல்..

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா உலகில் உண்மை மற்றும் வரலாற்று கதைகளை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. தற்போது அந்த ரூட்டையே பல இயக்குனர்களும் பின் தொடர்கின்றனர் அந்த வகையில் எழுத்தாளரும், எம்பியுமான சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை..

அடிப்படையாக வைத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் விரைவில்  பிரம்மாண்ட பட்ஜெட்டில் படத்தை  இருக்கிறார் என பல தகவல்கள் ஏற்கனவே வெளிவந்தன. இந்த படத்தில் நடிகர் சூர்யா, கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் மற்றும் ஹிந்தி டாப் ஹீரோரன்வீர் சிங் ஆகியோர்கள் இணைந்து இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த கதையை வேறு ஒரு நடிகரிடம் சொல்லி இருக்கிறார் அது குறித்து விலாவாரியாக நாம் பார்ப்போம்.. வேள்பாரி படம் இயக்குனர் ஷங்கரின் கனவு படமாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முதலில் தேர்வு செய்தது.

நடிகர் விஜய் தான் என சொல்லப்படுகிறது பல மாதங்களுக்கு முன்பாக ஷங்கர்  விஜய்யிடம் இந்த கதையை சொன்னாராம். பின்னர் இந்த படத்தின் தயாரிப்பு பொறுப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இயக்குனர் ஒப்படைக்க எண்ணினாராம் ஆனால் அதன் பிறகு படத்தின் வேலைகள் நடக்காமல் இருந்து வந்துள்ளது. பின்னர் ஒரு புதிய தயாரிப்பாளர் உடன் விஜயை  அணுகி  உள்ளார் ஆனால் தளபதி விஜய்யோ..

அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியதால் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்திற்கான தேதியை அவரால் சரியாக கொடுக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது இதனால் வேள்பாரி படம் அப்பொழுதே தடைப்பட்டு விட்டதாம். ஆனால் தற்போது இயக்குனர் ஷங்கர் அனைத்து வேலைகளையும் கரெக்டாக வைத்திருக்கிறாராம் ஹீரோக்களை மட்டும் தேர்வு செய்து படத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சில ஹீரோக்களின் பெயர்கள் அடிபட்டாலும் ஷங்கர் கடைசியாக யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment