அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல இயக்குனர்..! “துணிவு” படத்தில் இவரும் நடிச்சிருக்காரு..?

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் அண்மை காலமாக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது கூட தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஹச். வினோத் இயக்க போனி கபூர் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறார்கள்

இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி வருகிறது இந்த படத்தில் அஜித் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, அஜய், மகாநதி சங்கர், யோகி பாபு.

மற்றும் பல நட்சத்திர நடிகர், நடிகைகள் இந்த படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. AK 61 படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக பாங்காக் செல்ல இருக்கிறது அதற்கு முன்பாகவே அஜித் லடாக் பயணம் மேற்கொண்டார்.

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகின. இப்படி இருக்கின்ற நிலையில் பட குழுவும் ரசிகர்களை சந்தோஷப்படுத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று ரிலீஸ் செய்தது.. அடுத்த அரை மணி நேரத்திலேயே அஜித்தின் தீவிர ரசிகர்கள் பேனர் கட் அவுட் எல்லாம் வச்சி அழகு பார்த்தனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களுக்கு இன்னொரு நல்ல தகவலும் போய் உள்ளது அதாவது நடிகர் அஜித்குமார் உடன் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படம் தற்போது இணையதளப் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை…

Leave a Comment