‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய பிரபல இயக்குனர்.!

leo-1
leo-1

விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் மேலும் இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை கண்ட நிலையில் தற்போது லியோ திரைப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து வருகின்றனர்.

லியோ திரைப்படத்தில் விஜயுடன் திரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2ம் தேதி துவங்கிய நிலையில் தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தினை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்து வரும் நிலையில் இணை தயாரிப்பாளரான ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். மேலும் ராக்ஸ்டார் அனிருத் லியோ படத்திற்கு இசமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜு படத்தொகுப்பில், கலை இயக்குனராக N.சதீஷ்குமார், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டர் மேற்கொண்டு வருகின்றனர்.

leo
leo

இந்த படத்தில் மிஷ்கின் நடித்து வந்த நிலையில் அவருடைய காட்சியில் படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக சென்னை திரும்பிய இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இவரை அடுத்து தற்போது மற்றொரு இயக்குனரும் தன்னுடைய காட்சிகளில் நடித்த நிலையில் சென்னை திரும்பி உள்ளாராம். அதாவது, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அங்கு நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பட குழுவினர்களுடன் கௌதமேனன் வாசுதேவ் தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடு இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவருடைய காட்சியின் ஷூட்டிங் நிறைவு பெற்றதாகவும் எனவே தற்போது சென்னை கிளம்பி உள்ள நிலையில் அடுத்ததாக துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.