அஜித் படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து தக்க வைத்துக் கொண்ட பிரபல நிறுவனம்…

0
AJITH
AJITH

தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமான முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்து வரும் லைக்கா நிறுவனம் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் லைக்கா தமிழ் சினிமாவை ஆளுகிறது எனவும் கூறலாம் ஏனென்றால் நடிகர்களுக்கு பல கோடி சம்பளம் கொடுத்து வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் லைக்கா நிறுவனம் சமீபத்தில் தான் பொன்னியின் செல்வன் போன்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் இருக்கும் படங்களை உருவாக்கியது மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கம் இருக்கும் படத்தினை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

மேலும் சூப்பர் ஸ்டார் அவர்களை வைத்து இரண்டு படங்கள் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பே லைக்கா நிறுவனம் தரப்பிலிருந்து புதிய படம் ஒன்றின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வெளிநாட்டில் திரையிடம் உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது.

மேலும் துணிவு திரைப்படத்தினை வெளிநாட்டு உரிமையை வாங்க எந்த ஒரு விநியோகஸ்தர்களும் முன் வராத காரணத்தினால் லைக்கா நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது இவ்வாறு இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.