பிக்பாஸ் சீசன் 6 -ல் களம் இறங்கும் பிரபல காமெடி நடிகர்..? தலைவன் வந்தால் போதும் பிரச்சனை ஆட்டோமேட்டிக்கா வரும்..

விஜய் டிவி தொலைக்காட்சியில் பல்வேறு விதமான ரியாலிட்டி ஷோ மற்றும் புதிய சீரியல்களை கொடுத்து வலம் வருவதால் இல்லத்தரசிகளையும் தாண்டி ரசிகர்களும் பார்த்து கண்டு களித்து வருகின்றனர் இப்பொழுது கூட மக்களின் அபிமான நிகழ்ச்சியாக பார்க்கப்படும் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கப்பட இருக்கிறது.

ஏற்கனவே ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிக் பாஸ் ஆறாவது சீசன் வருகின்ற அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் ரசிகர்களும் மக்களும் பெரிய அளவில் கொண்டாட ரெடியாக இருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 6 லோகோ மற்றும் ப்ரோமோக்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற போட்டியாளர்கள் என்னதான் தனது திறமையை காட்டினாலும் அந்த நிகழ்ச்சியை சூப்பராக எடுத்துக் கொண்டு போவது தொகுப்பாளர் தான் ஐந்து சீசனையும் உலக நாயகன் கமலஹாசன் சீரும் சிறப்புமாக கொண்டு சென்றார். அதேபோல பிக் பாஸ் ஆறாவது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

அதற்காக கமலஹாசனுக்கு சம்பளமாக 75 கோடி ருபாய் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் சீசன் 6 யில் எந்தெந்த போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த வகையில் திவ்யதர்ஷினி, ஜி பி முத்து, ரக்சன் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் சீசன் 6 யில் காமெடி நடிகர் திரைப்பட விமர்சகர் ஆன கூல் சுரேஷ் பிக் பாஸ் சீசன் 6யில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது தீயாய் பரவி வருகிறது.

Leave a Comment