அஜித்தின் காதல் கோட்டை திரைப்படத்தில் தேவயானி கதாபாத்திரத்தை நழுவ விட்ட பிரபல நடிகை.! ஐயோ வட போச்சே என கூறும் ரசிகர்கள்.

0

தமிழ் சினிமா உலகைப் பொறுத்தவரை ஒரு நடிகர் அல்லது ஒரு நடிகை பிரபலமாக வேண்டும் என்றால் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு நடித்தால் மட்டுமே பிரபலமாகலாம் இல்லையென்றால் சினிமாவை விட்டுவிட்டு வேறு வேலை தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் தமிழ் சினிமாவில் கிடைத்த கதாபாத்திரங்களை நழுவ விட்டு விட்டு பெரிய நடிகர்களின் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என நம்பி பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகிய பலரும் தற்போது வருத்தப்பட்டு வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் அஜித்தின் காதல் கோட்டை படத்தை பிரபல நடிகை மிஸ் செய்து விட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது அஜித்தின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படமாக அமைவது காதல் கோட்டை இந்த திரைப்படத்தை இயக்குனர் அகத்தியன் இயக்கி தேசிய விருது வென்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தேவயானி நடித்து இருப்பார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அஜித் மற்றும் தேவயானி ஆகிய இருவரும் சேர்ந்து நடித்ததால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டது மேலும் தேவயானி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் விஜயின் பூவேஉனக்காக திரைப்படத்தில் ஒரு தலை காதலியாக நடித்த அஞ்சு அரவிந்த் என்பவர்தான் தேவயானி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமாம்.

ஆனால் அப்பொழுது அவருக்கு ரஜினியின் அருணாச்சலம் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டதாம் இதனால் இவர் தேவயானி கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை என காதல் கோட்டை திரைப்படத்தை இயக்கிய அகத்தியன் இந்த தகவலை கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ajith09
ajith09

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் தேவயானி நடித்த கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்து விட்டது ஆனால் இந்த நடிகை நடித்திருந்தால் படம் கண்டிப்பாக நன்றாக இருந்திருக்கும் இவர் இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு விட்டார் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.