ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க கண்டிஷன் மேல் கண்டிஷன் போடும் பிரபல நடிகை..! குழம்பி நிற்கும் நெல்சன்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படம் தான் அண்ணாத்த இந்த திரைப்படம் சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இவர் உருவாகும் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் பிரியங்கா அருள் மோகன் யோகி பாபு போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகை தமன்னாவும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னா சமீபத்தில் எந்த ஒரு திரைப்படங்களிலும் முகம் காட்டாமல் இருந்து வந்த நிலையில் திடீரென சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில்  நடிக்கிறார் என்ற செய்தி வெளிவந்த நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடிகை தமன்னா எந்த ஒரு வாய்ப்பும் இன்றி தவித்து வந்த நிலையில் ஒரு சில தெலுங்கு திரைப்படத்தில் மட்டுமே முகம் காட்டி வந்தார் ஆனால் சமீபத்தில் இவர் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வெளிவந்த நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குவியத்துடங்கிவிட்டது.

thamannah-1
thamannah-1

இது ஒரு பக்கம் இருக்க நமது நடிகை இயக்குனர் நெல்சன் இடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளாராம் அதாவது தன்னுடைய போசனை விரைவில் சூட் செய்து முடித்து விட வேண்டும் என கூறியுள்ளார் ஏனெனில் தமன்னாவுக்கு தற்பொழுது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறதாக கூறியுள்ளாராம்.

இந்த அதிர்ஷ்டம் அனைத்தும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் ராசி தான் என ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Comment