விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு புலம்பும் பிரபல நடிகை.! கண்ணு கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா.?

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவர் வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் பெரிதாக பிரபலமடையவில்லை. பல தோல்விகளையும் சில வெற்றிகளையும் சந்தித்து வந்த இவர் தனது விடா முயற்சியினாலும், சிறந்த நடிப்பினாளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

தற்போது இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாக பெரிதாக பிரபலம் அடையவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர் இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படம் உலகம் முழுவதும்  250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜ் நடித்து வருகிறார். அந்த வகையில் இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் நடனமாடி உள்ள பல  பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

அந்த வகையில் பொதுவாக விஜய் உடன் இணைந்து நடிக்க தற்போது உள்ள இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் விரும்புவது வழக்கம்.  அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த திரைப்படம் யூத்.

இத்திரைப்படத்தில் ஆதோட்ட பூபதி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.தற்பொழுது வரையிலும் இந்தப் பாடல் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தப் பாடலில் சிம்ரன் நடனம் ஆடி இருந்தார். இவருக்கும் இந்தப் பாடல் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் இதனைப் பற்றிய சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதாவது இவர் சில படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் பொழுது ஆதோட்ட பூபதி பாடலில் நடனம் ஆடுவதற்கு இவருக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் யோசித்து சொல்வதாக கூறியதால் சிங்கிள் கேப்பில் சிம்ரன் நுழைந்து வாய்ப்பை தட்டி சென்றுவிட்டாராம்.  இதனை காயத்ரி ரகுராம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.