நடிகர் அஜித்திடம் வீடியோ காலில் பேசிய பிரபல நடிகை.! அட இந்த நடிகையா ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார்..

இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் ஒரு பக்கம் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள்,வீடியோக்கள் போன்றவற்றை ஷேர் செய்து நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் ரசிகர்களுக்கு விடப்பட்டது. விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது எனவும் தகவல் வைரலாகி வரும் நிலையில் பிரபல நடிகை ஒருவர் அஜித்திடம் பேசிய வீடியோ கால் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

ஆம் யார் அந்த நடிகை என்று கேட்டால் வேறு யாரும் இல்லை பிரபல நடிகை பாவனா தன்னுடைய வாழ்த்தை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துவிட்டு அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றையெல்லாம் பகிர்ந்து வருகிறார். ஆம் இவர் அஜித்துடன் இணைந்து நடித்த அசல் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக தற்பொழுது வரை திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ajith
ajith

மேலும் இதனை தொடர்ந்து பார்த்தால் நடிகர் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை ரசிகர்கள் தற்பொழுதே கொண்டாடி வருகிறார்கள். கூடிய சீக்கிரம் இந்த திரைப்படத்தை எடுக்க ஆரம்பித்து விட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என ஒரு சில ரசிகர்கள் கூறிவரும் நிலையில் பலரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இவர் நடித்த பல திரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றையெல்லாம் இணையத்தில் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

ajith
ajith

Leave a Comment