பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி கழுவி ஊத்திய பிரபல நடிகர்.! ஆத்தாடி இவரா என ஜகா வாங்கும் பிரபலங்கள்

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி அவர்கள் கழுவி ஊற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிரபலமாக ஒளியாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில் மூன்றாவது வாரம் தற்போது தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசல், ராபர்ட், ஜனனி, விஜே மகேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரட்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, உள்ளிட்ட 20 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஒரே நேரத்தில் டிவியிலும் ஓடிடி  தளத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனை தொடர்ந்து  தற்போது உள்ள பிக் பாஸில் அதிக ரசிகர்கள் பட்டாலும் கொண்ட ஜிபி முத்து தாமாகவே முன்வந்து வெளியேறி இருந்தார். இவரைத் தொடர்ந்து கடந்த வாரம் இரண்டாவது வாரத்திற்கான் எவிக்சன் நடந்தது. அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி கலவரமாக சென்று கொண்டிருக்கிறது இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் ராதாரவி ஒரு பேட்டியில் பிக் பாஸை கழுவி ஊற்றி இருக்கிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ராதா ரவி அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார் அப்பொழுது பிக் பாஸ் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் கூறியது தான் தற்போதைய இணையத்தில் வைரல் ஆகி வருகிறது பிக்பாஸ் எவ்வளவு நாள் தான் பல்லு விளக்குவது குளிப்பது துணி துவைப்பது சாப்பிடுவது கக்கூஸ் கழுவுவது என்று பார்ப்பது இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா என்றும் அதில் அறிவுப்பூர்வமாக ஆக்கப்பூர்வமாக பேசுகிறார்களா எதுவும் கிடையாது என்று பிக் பாஸ் ஐ கழுவி ஊற்றியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version