இயக்குனர் எஸ் ஜே சூர்யாவுக்கு படத்தை எடுக்க கத்து கொடுத்த பிரபல நடிகர்.? படம் வெளிவந்து அதிரி புதிரி ஹிட்டாம்.! ஷாக்கான பிரபலங்கள்.

0

சினிமாவின் மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படத்தை பிற மொழிகளில் ரீ மேக் செய்து அந்த மொழிகளிலும் காசு பார்க்கின்றனர் இயக்குனர்கள் அந்த வகையில் பல்வேறு திரைப்படங்கள் தற்போது பிற மொழிகளில் ரீ மேக் செய்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அந்த வகையில் திரை உலகில் இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகராக மாறிய எஸ் ஜே சூர்யா.

தமிழ் சினிமாவில் பல தரப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து உள்ளார் அதில் ஒன்றாக பேசப்பட்ட படம் “குஷி” இந்த திரைப்படத்தில் விஜய், ஜோதிகா, விவேக் போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெறவே தொடர்ந்து தெலுங்கில் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணை வைத்து ரீமேக் செய்து இருந்தார் இயக்குனர் எஸ் ஜே சூர்யா.

ஆரம்பத்தில் கதை கேட்க தயங்கிய பவன்கல்யாண் ஒரு கட்டத்தில் நானே நடிக்கிறேன் என முழு கதையை கேட்ட பிறகு ஓகே சொன்னார். படத்தின் கதை அவருக்கு பிடித்து இருந்தாலும் படத்தில் ஒரு சில சீன்களை புதிதாக வைக்க வேண்டும் எனவும் எஸ் ஜே சூர்யாவுடன் சொல்லி உள்ளாராம் பவன்கல்யாண் அதற்கு இவரும் ஏன் என கேட்க படத்தின் கதையில் ஒரே ஒரு சண்டைக்காட்சி தான் இடம் பெற்றுள்ளது.

தெலுங்கு சினிமா ரசிகர்கள் சண்டை காட்சிகளை அதிகம் விரும்பக் கூடியவர்கள் அதனால் படத்தில் இரண்டு அல்லது மூன்று சண்டை காட்சிகள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார் பவன்கல்யாண். அதற்கு எஸ் ஜே சூர்யாவும் படத்தின் இடையில் சண்டை புகுத்தினால் படத்தை காண வெற்றி குறையும் என கூறினாராம் எஸ் ஜே சூர்யா.

ருப்பினும் பவன் கல்யாண் அவர்களுகாக படத்தின் கதையை சற்று மாற்றியமைத்து சண்டை காட்சிகளை படத்தில் திணித்தார் படம் வெளிவந்து நல்ல பெரிய வரவேற்பைப் பெற்றதாம். பவன் கல்யாண் பல்வேறு தனது படங்களுக்கு இதுபோன்ற சில காட்சிகளை மாற்ற வேண்டும் என இயக்குனரிடம் ஓப்பனாக பேசியுள்ளார் அந்த திரைப்படங்கள் பெரிய பெரிய வசூல் வேட்டையும் நடத்தி உள்ளதாம்.