அஜித் இந்த மாதிரியான படத்தில் வில்லனாக நடித்தால்.! தமிழ் சினிமா உலகம் நிச்சயம் அதிரும் என கூறிய பிரபல நடிகர்.!

0

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும்  நாயகனாக விளங்குபவர் தல அஜித். அஜித் அவர்கள் தற்பொழுது ஹச். வினோத்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா  பிரச்சினை காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பிரச்சனை எல்லாம் முடிந்தபின் வலிமை படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் பார்த்திபன் அவர்கள் அஜித்தை பற்றி சூப்பரான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.நான் அஜித்துடன் ஒரு சில படங்களில் நடித்துள்ளேன் அது அருமையான நிகழ்வு அஜீத் ஹீரோவாக நடிப்பதை விட மிகச் சிறப்பாக வில்லன் கேரக்டரில் நடிக்க கூடியவர்.

parthipen
parthipen

அதனை உங்களுக்கு உணர்த்த வேண்டும் என்றால் வாலி திரைப்படத்தில் இதுவரை நடித்திராத அஜித் அந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் சிறப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இவர் ஹீரோவாக நடிப்பதை விட வில்லன் கதாபாத்திரம் கொடுத்தால் மிக சிறப்பாக நடிப்பார் என எனக்கு தோன்றுகிறது.

ஹாலிவுட்டில் ஜோக்கர் கதாபாத்திரம் போல் அஜித்  ஒரு படத்தில் நடித்தால் தமிழ்  சினிமா  அதிரும் என தெரிவித்தார் பார்த்திபன் மேலும் அஜித் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடிக்க கூடியவர் என தெரிவித்தார் நானும் அஜித்தும் வில்லன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.