சத்யராஜை உண்மையிலேயே அடித்து ஓட விட்ட பிரபல நடிகர்.! வலி தாங்க முடியாமல் கெட்டவார்த்தையில் திட்டிய சத்யராஜ்.! பல வருடங்களுக்கு பிறகு உண்மையை உடைத்த பிரபலம்.!

தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் சத்யராஜ் இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கினார். வில்லனாக இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன அதேபோல் வில்லனாக அவர் பேசிய வசனங்களும் இன்னும் பிரபலம் தான்.

இந்தநிலையில் ஒரு காலகட்டத்தில் வில்லனாக சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது என ஹீரோவாக தன்னை மக்களிடையே பிரபலம் படுத்திக் கொண்டார். அந்தவகையில் நூறாவது நாள், முதல் மரியாதை, மிஸ்டர்பரத், கடலோர கவிதைகள், வேதம்புதிது, என பல திரைப்படங்களில் தன்னுடைய வித்தியாசமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி நடித்தார்.

மேலும் கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தன இந்தநிலையில்  சத்யராஜ் குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம். அவர் கூறியதாவது டி ராஜேந்திரன் அப்பொழுது பிரபல இயக்குனராக இருந்து வந்தார் அப்படி இருந்த நிலையில் டி ராஜேந்திரன் இயக்கத்தில் தங்கைக்கோர் கீதம் உயிருள்ளவரை உஷா ஆகிய திரைப்படங்களை சத்தியம் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வந்தது.

அதேபோல் இந்த இரண்டு திரைப்படங்களையும் தன்னுடைய சொந்த தயாரிப்பில் டி ராஜேந்திரன் தயாரித்திருந்தார். தங்கைக்கோர் கீதம் திரைப்படத்தில்  சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அப்பொழுது ஒரு சண்டைக் காட்சியில் டி ராஜேந்திரன் அவர்கள் சத்யராஜை அடிப்பது போன்று காட்சிகள் அமைந்திருக்கும் அப்போது ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் அவர்கள் மிகவும் பக்குவமாக சத்யராஜ் வயிற்றில் அடிக்க வேண்டும் என டி ராஜேந்திரன் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.

ஆனால் டி ராஜேந்திரன் சத்யராஜ் அடிக்கும் பொழுது உண்மையாகவே வயிற்றில் மாறி மாறி குத்தி விட்டார் அதனால் வலி தாங்க முடியாமல் சத்யராஜ் கதறி அழுதுள்ளார் அதுமட்டுமில்லாமல் வலி தாங்க முடியாமல் டி ராஜேந்திரன் அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். மேலும் சத்யராஜ் ஸ்டண்ட் மாஸ்டர் சொல்லி கொடுத்தபடி உங்களால் அடிக்க முடியாதா என இராஜேந்திரன் அவர்களிடம் கத்தியுள்ளார். எதற்காக அப்படி அடிக்கிறய் நானும் மனுஷன் தான் என கூறிவிட்டு படப்பிடிப்பை விட்டு வெளியேறிவிட்டார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு சத்யராஜ் படப்பிடிப்பு தளத்திற்கு வரவில்லை இதனை அறிந்த டி ராஜேந்திரன் தன்னால்தான் சத்யராஜ் படப்பிடிப்புக்கு வரவில்லை என்பதை உணர்ந்து சத்யராஜ் அவர்களிடம் நேரில் சென்று சமாதானப்படுத்தி பிறகே படப்பிடிப்புக்கு அழைத்து வந்தார் அதன் பிறகுதான் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது.

இந்த தகவலை நீண்ட வருடங்களுக்கு பிறகு ஸ்டண்ட் மாஸ்டர் தற்போது கூறியுள்ளார் இந்த தகவல் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Leave a Comment