அஜித்துடன் இணைந்து “மங்காத்தா” திரைபடத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த பிரபல நடிகர்.! யார் அது தெரியுமா.?

அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மங்காத்தா அஜித்தின் 50வது திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் அஜித் சற்று வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இவரது காட்சியும் மிரட்டும் வகையில் இருந்தது மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து பலர் நடித்திருந்தனர்.

அர்ஜுன், ஆண்ட்ரியா, வைபவ், மகத், பிரேம்ஜி, அஞ்சலி, அஸ்வின், ராய் லட்சுமி, திரிஷா போன்ற பலர் நடித்து அசத்தி இருந்தனர். ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் அனைத்து தரப்பட்ட மக்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது படம் சிறப்பாக ஓடி.

மிகப்பெரிய வசூலை பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் அஜித்தின் 50வது திரைப்படம் பிளாக்பஸ்டர் லிஸ்டில் அமைந்தது. இப்பொழுது கூட அஜித் ரசிகர்களுக்கு ஃபேவரிட் படமாக இருந்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் காவல்துறை அதிகாரியாக இந்த திரைப்படத்தில் அஸ்வின் நடித்திருப்பார்.

முதன் முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் நந்தா தான் தேர்வாகி இருந்தாராம். இயக்குனர் வெங்கட் பிரபு அவரை அணுகி  கதையை கூறி உள்ளார் ஆனால் அப்போது அவர் மங்காத்தா திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போகவே பின்னர் அஸ்வின் நடித்தாராம். பின் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்தி அதை உணர்ந்த நடிகர் நந்தா.

இப்படி ஒரு படத்தை மிஸ் செய்து விட்டோமே என வருத்தப்பட்டு உள்ளார். உண்மையை சொல்லப்போனால் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அதன்பின் பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version