தல, தளபதியை தொடர்ந்து பொங்கல் ரேஸில் கலந்துகொள்ள காத்திருக்கும் பிரபல நடிகர்.? இந்த பொங்கலை எந்த ரசிகர்கள் கொண்டாட போகிறார்களோ.?

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பிரபலங்களின் படங்கள் சமீபகாலமாக தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் தனித்து வந்த நிலையில் வருகின்ற பொங்கலை முன்னிட்டு பல்வேறு திரைப்படங்கள் போட்டியிட இருக்கின்றன.

அந்த வகையில் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் முதலில் தீபாவளியில் வெளியாகும் என அறிவித்தது. அதிலிருந்து பின்வாங்கி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகும் என கூறியது அதிலிருந்தும் தற்போது பின்வாங்கிய ஒருவழியாக வர இருக்கின்ற 2022 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக சொல்லியுள்ளது.

அதேபோல் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படம் வருகின்ற பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இதன் மூலம் மீண்டும் ஒரு முறை அஜித், விஜய் படங்கள் மோத இருக்கின்றனர் பல முறை விஜய் வெற்றி பெற்ற நிலையில் இந்த தடவை அஜித்தே வெற்றி பெறுவார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இப்படி ஒரு சூழலில் இருக்க இந்த ரேஸ்ஸில் தற்பொழுது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் “டான்” இப்படம் வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகச் இணையதள பக்கத்தில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அப்படி வெளிவந்தால் விஜய்யின் பீஸ் அஜித்தின் வலிமை ஆகிய இரண்டு படங்கள் உடன் சேர்ந்து சிவகார்த்திகேயனின் டான் படமும் மோதும். ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியானால் ரசிகர்கள் கூட்டம் தியேட்டரில் ஈ போல சுற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.