பிக்பாஸ் வீட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் கோட்டைவிட்ட பிரபல நடிகர் – ஏன் போகவில்லை தெரியுமா.? வெளிவரும் தகவல்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் முதல் நான்கு சீசன்கள் சீரும் சிறப்புமாக முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் அண்மையில் தொடங்கியது ஒரு வாரம் முடிந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான போட்டி தற்போது ரெடியாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த வாரத்தில் யாரோ ஒரு நபர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல உறுதியாக இருந்து கடைசி நேரத்தில் போகாமல் படங்களில் நடிக்க சென்றுவிட்டார் ஒரு பிரபலம் அவர் வேறு யாரும் அல்ல.

சார்பட்டா பரம்பரை படத்தில் பாக்ஸராக நடித்த சந்தோஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் கலந்துகொள்வதற்காக அவரிடம் சம்மதம் வாங்கி இருந்தது பிக்பாஸ்.  நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் அவர் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகி இருந்தார் .

ஒருகட்டத்தில் மிஷ்கினிடம் அவர் நான் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொள்ள போகிறேன் என தெரிவித்தார் அதற்கு மிஸ்கின் படம் ரிலீஸ் ஆக இருக்கிற சூழலில் யாரை கேட்டு நீ இந்த முடிவை எடுத்தீங்க.. அந்த நிகழ்ச்சியில் போன சிலர் என்ன ஆனாங்க உனக்கு தெரியாதா அங்கே போய் பெயரை கெடுத்துகாத படத்தை அது பாதித்துவிடும்.

ஆனாலும் அந்த ஷோவுக்கு போய் தான் ஆகணும்னா படத்துல உங்க போஷனை ட்ரிம் பண்ணி தான் ஆகணும் எனக்கு வேறு வழி தெரியாது என இயக்குனர் மிஸ்கின் சொல்லிவிட்டார். வேறு வழியின்றி கடைசி நிமிடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லை என சொன்னார் நடிகர் சந்தோஷ்.

Leave a Comment