தளபதி விஜய்க்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகர்.? பின்தளபதி விஜய் என்ன செய்தார் தெரியுமா.? சுவாரஸ்யமான தகவல்.

vijay
vijay

திரையுலகில் இருப்பவர்கள் எப்பொழுதும் நல்லது ஒரு புரிதலுடன் இருந்தாலும் எதிர்பாரத விதமாக முக்கியமான நாட்களில் அவரது திரைப்படங்கள் மோதிக் கொள்கின்றன ஆனால் ரசிகர்கள் அதில் யார் ஜெயிப்பார்கள் என்பதே மிகப்பெரிய அளவில் கொண்டாடுகின்றனர் .

ஆனால் அதை பெரிதாக அந்த நடிகர்கள் எடுத்துக் கொள்ளாமல் நெருங்கிய நட்புடன் இருந்து வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்று அரங்கேறி உள்ளது அதாவது தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

அதே ஸ்டூடியோவில் நடிகர் கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு சூட்டிங் நடந்து வருகிறது.  இதனிடையே நடிகர் கார்த்தி திடீரென சர்தார் படத்தின் கதை ஏற்ற ஒரு புதிய கெட்டப் போட்டுள்ளார் அப்படியே பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குள் உள்நுழைந்து விஜய்யை கட்டி பிடித்து உள்ளார்.

யாரோ என நினைத்துக்கொண்டு விஜய்யும் பெரிதாக கண்டு கொள்ளவில்லையாம். நடிகர் கார்த்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு விஜய் அவரை கட்டிப்பிடித்து தழுவினார்.

மேலும் சில நேரம் இருவரும் பேசிக் கொண்டனராம். மேலும் விஜய் சர்தார் பட குழுவினரையும், அவரையும் பாராட்டினார் என தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.