சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்ட PS2 முக்கிய பிரபலம்.! அட யார் யார் இருக்காங்கன்னு பார்த்தீங்களா.!

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து வந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களுமே தங்களது அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடிக்கவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தனது திரைப்படத்தில் காட்சிகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் எடுத்திடாத காட்சிகளாக எடுத்து வருபவர்.மேலும் பொன்னியின் செல்வன் கதையை எப்படியாவது படமாக எடுத்து விட வேண்டும் என்று தமிழ் சினிமாவில் பல பிரபலங்களும் ஆர்வத்துடன் இருந்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு எல்லாம் என்ன ஆச்சு என்பது தெரியவில்லை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தனது அசாத்திய திறமை மூலம் இந்த முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார்.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பயங்கரமாக இருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விக்ரம் பிரபு இவர் தற்பொழுது தனது சமூக வலைதளங்களில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மணிரத்னம் அவர்கள் அசால்டாக இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இந்த திரைப்படம் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம் என்றும் எப்பொழுது முதல் நாள் வசூல் தெரியவரும் என்பது பற்றி பலவிதமான கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment