விஜய் டிவியை தூக்கி எறிந்த ஆலியா மானசாவிற்கு நடந்த சரியான சம்பவம்.! பரிதாப நிலையை பார்த்து வருத்தப்படும் ரசிகர்கள்

சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள ஆலியா மானசா தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புது சீரியலான இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்த வருகிறார். இந்த சீரியல் துவங்கப்பட்ட சில வாரங்களை ஆகும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் ஆலியா மானசாவிற்கு விபத்து ஏற்பட்டு காலில் பெரிய கட்டு போட்டு இருக்கிறது இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வீல்சேரில் அமர்ந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த பதிவில் ஆலியா மானசா எனக்கு விரைவில் குணமாக வேண்டும் என கடவுளிடம் வேண்டுங்கள் என தன்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுது ஆக்ட்டிவாக இருந்து வரும் ஆலியா மானசா தொடர்ந்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் மேலும் நடனமாடும் வீடியோக்கள், வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அந்த வகையில் இவரை சுமார் 4.2 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது இந்த குழந்தை பிறக்கு சில மாதங்களிலேயே தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக பல உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். இவ்வாறு மீண்டும் ஸ்லிம்மாக மாறி ஆலயா மானசா தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களின் நடிப்பாரென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக விஜய் டிவியிலிருந்து விலகி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புது சீரியலான இனியா சீரியலில் நடிக்க தொடங்கினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. அதாவது இவருடைய கணவர் சஞ்சீவ் சன் டிவிக்கு சென்றவுடன் தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அதேபோல் நாமும் பிரபலம் அடைந்து விடலாம் என்று எண்ணத்தில் சன் டிவியில் நடிக்க தொடங்கினார்.

aliya manasa
aliya manasa

அந்த வகையில் இந்த சீரியலும் துவங்கப்பட்ட சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பியில் முன்னணி வகிக்க தொடங்கியது. எனவே சோசியல் மீடியாவில் தன்னுடைய கணவருடன் இணைந்து ஆட்டம் போட்டு வந்த நிலையில் ஆலியா மானசாவிற்கு தற்பொழுது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது இவ்வாறு ஆலியா மானசாவின் இந்த பரிதாப நிலையை பார்த்து பலரும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

Leave a Comment